விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:HD
WP:HELP
எப்படி தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமாகக் கட்டுரை எழுதுவது என்று ஐயமா? பக்கங்களைத் தொகுப்பதில் சிக்கலா? உங்களுடைய கேள்விகளை இங்கே கேளுங்கள்.

கேள்விகளை எழுத, இப் பக்கத்தின் மேற்பக்கத்தில் உள்ள "தலைப்பைச் சேர்" என்பதை அழுத்துங்கள். கேள்வியை எழுதுவதற்கான கட்டம் திறக்கும். அக் கட்டத்தில் உங்கள் கேள்விகளை எழுதுங்கள். தமிழில் எழுதுவது நல்லது. தமிழில் எழுத இயலாவிட்டால் ஆங்கிலத்திலும் எழுதலாம். எழுதிய பிறகு கீழே காணும் "பக்கத்தைச் சேமிக்கவும்" என்ற பொத்தானை அழுத்தவும்.

« பழைய உரையாடல்கள்
தொகுப்பு
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |14|15

பகுப்பு உருவாக்கம்[தொகு]

நான் எப்படி உரு புதிய பகுப்பை உருவாக்கலாம்.--Vishwa Sundar (பேச்சு) 18:04, 9 பெப்ரவரி 2022 (UTC)Reply[பதில் அளி]

உதவி:பகுப்பு பக்கத்தைப் பாருங்கள். ஒரு பகுப்பை உருவாக்கும் போது அதனைக் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு தாய்ப்பகுப்புகளுக்குள் சேர்த்து சேமிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 21:19, 9 பெப்ரவரி 2022 (UTC)Reply[பதில் அளி]
நான் ஒரு கட்டுரையைத் திருத்தி வருகிறேன். அதில் பகுப்பு இல்லை என்று வந்தன. பகுப்பு எப்படி போட? யாராவது உதவுங்கள் பிளீஷ் Hicas21 (பேச்சு) 10:20, 8 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]

புத்தகம் பற்றி எழுத கூடாதா ?[தொகு]

நான் எழுதிய கட்டுரை அயல் இனத்தார் ஆதிக்கம் நூல் இது புத்தகம் பற்றிய கட்டுரை இதனை பயனர் AntanO நீக்கினார் .விக்கிபிடியா புத்தகம் பற்றி கட்டுரை எழுத அனுமதி இல்லையா? --பாலாசி (பேச்சு) 09:16, 6 சூன் 2020 (UTC)Reply[பதில் அளி]

விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்) இந்த வரையரைக்குள் வரும் எந்த நூல்கள் பற்றியும் நீங்கள் கட்டுரை எழுதலாம்.--Kanags \உரையாடுக 09:48, 6 சூன் 2020 (UTC)Reply[பதில் அளி]

Kanags நன்றி நீங்கள் காட்டிய வரையரைகுள் தான் எனது கட்டுரை இருந்தது அதனை user:AntanO நீக்கிவிட்டு ஆங்கில மொழிபெயர்பு எழுத சொல்கிறார் .ஆங்கில மொழி பெயர்பு செய்வது மட்டும் என்றால் தமிழ்நாட்டிலும் புத்தகம் மற்றும் எழுத்தாளர் பற்றி விக்கில் எப்போது எழுதுவது --பாலாசி (பேச்சு) 10:02, 6 சூன் 2020 (UTC)Reply[பதில் அளி]

மேலுள்ள வரையறை இணைப்பு தமிழில் தானுள்ளது. போதிய விளக்கம் அதில் இல்லை என்றால் ஆங்கிலப் பக்கத்தைப் பாருங்கள். இதையும் பாருங்கள்.--Kanags \உரையாடுக 10:16, 6 சூன் 2020 (UTC)Reply[பதில் அளி]


Kanagsநீங்கள் சொன்ன விக்கிபிடியா சட்டங்களுக்கு உட்பட்டே எனது அழிக்கப்பட்ட கட்டுரை இருந்தது.அதே கட்டுரை மீட்டு எடுக்க முடியுமா ?--பாலாசி (பேச்சு) 13:06, 6 சூன் 2020 (UTC)Reply[பதில் அளி]

பயனரின் பேச்சுப்பக்கத்தில் உரையாடல் உள்ளது. அங்கு கருத்திடலாம். ஒரே விடயத்தை பல இடங்களில் உரையாட வேண்டியா தேவையில்லை. நன்றி. --AntanO (பேச்சு) 00:34, 7 சூன் 2020 (UTC)Reply[பதில் அளி]

antano ஒரு சர்வாதிகாரியா? சர்வாதிகாரி ஆண்டனோ (antano) நீக்குகிறார். விக்கியில் தமிழ் வளர தடையாக உள்ள இது போன்ற சர்வாதிகாரிகளை நீக்கிவிட்டு தவறுகள் இருப்பின் அதை சுட்டிக் காட்ட்ம் நல்லவர்களை நியமியுங்கள்.ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் என்ற அமைப்பு மணவை முஸ்தபாவின் மகனாரின் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது. உலகளாவிய இந்த அமைப்பு, விக்கிப்பீடியா தமிழ்க் கட்டுரைகளை ஊக்குவிக்க ஒவ்வொரு கட்டுரைக்கும் நிதி வழங்கியும் வருகிறது. அதற்கென பயிற்சியளிக்க தமிழ்ப்பரிதி மாரி அவர்களை நான் தொடர்பு கொண்டு பயிற்சியளித்து வருகிறேன். அவரும் பயிற்சியளித்தார். நான் முயற்சிக்க வேண்டி 2 கட்டுரைகளை எழுதினேன். ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் மணவை முஸ்தபா ஆய்விருக்கை என்ற கட்டுரையை காழ்ப்புணர்ச்சியில் தமிழ் வளரக் கூடாது எனும் சிந்தனை கொண்ட சாதி வெறியர்கள் நீக்குவதை ஏற்க முடியாது. எனது கட்டுரையில் எங்கே தவறு என்று சொல்லியிருந்தால் அடுத்த முறை நான் சரியாக கட்டுரை எழுத முடியும். ஆனால் தவறுகளைக் கூறாமல் விதிகளை வைத்துக் கொண்டு நீக்கல் நடவடிக்கை எடுக்கும் முட்டாள்களை என்ன சொல்வது? முதலில் கற்றுக் கொடுங்கள். பிறகு தவறு செய்தால் நீக்கலாம். முனைவர் ராஜ.கார்த்திக்,இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி கோவை கார்தமிழ் (பேச்சு) 09:39, 2 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]

@கார்தமிழ்: பயிற்சி என்று கூறிக்கொண்டு இங்கு பலர் கட்டுரைகளை எழுதுகிறார்கள். இவ்வாறான ஆயிரக்கணக்கான விக்கிப்பீடியாவுக்கு ஒவ்வாத கட்டுரைகள் திருத்தப்படாமல் உள்ளன. இவ்வாறு எழுதுபவர்கள் என்ன காரணத்துக்காக எழுதுகிறார்கள் என்று அறியமுடியவில்லை. தமிழில் எழுதப் பழக வேண்டுமென்றால் இணையத்தில் நிறைய இடங்கள் உள்ளன. பயிற்சிக்காக எழுத வேண்டுமென்றல் உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். மணல்தொட்டியில் எழுதித் திருத்தி விட்டு, வேறு அனுபவம் வாய்ந்த பயனரிடம் (அல்லது உங்கள் பயிற்சியாளரிடம்) காட்டித் திருத்தி, கட்டுரை ஆக்குங்கள். அதை விடுத்து, இங்கு தனிப்பட்ட தாக்குதல்களை எவர் மீதும் தொடுக்காதீர்கள். உங்கள் பயனர் பேச்சுப் பக்க வரவேற்புரையில் உதவிக் குறிப்புகள் உள்ளன.--Kanags \உரையாடுக 10:51, 2 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]
@கார்தமிழ்: மொழி ஆர்வம் மிக்க தன்னார்வலர்கள் பலரும் ஒற்றுமையாக இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவை வளர்த்து வருகின்றோம். தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதப்பட வேண்டிய அடிப்படை செய்திகள் இலட்சக் கணக்கில் இருக்கின்றன. உண்மையான தமிழ் ஆர்வத்தோடு விக்கிக்குள் வருபவர்கள் கருத்தில் தெளிவில்லாத எந்தவொரு தலைப்பையும் எழுதத் தேர்ந்தெடுத்து அதற்காக சண்டையிட்டுக் கொண்டு இருக்கமாட்டார்கள்.
ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் என்ற உலகளாவிய இந்த அமைப்பு, விக்கிப்பீடியா தமிழ்க் கட்டுரைகளை ஊக்குவிக்க ஒவ்வொரு கட்டுரைக்கும் நிதி வழங்கியும் வருகிறது என்று நீங்கள் கூறியுள்ள இந்த ஒற்றை செய்தி, இத்தனை ஆண்டு காலம் தன்னார்வத்துடன் போராடி எழுதிக்கொண்டு வருகின்ற அத்தனை பயன்ர்களின் உழைப்பையும் அசிங்கப்படுத்துகிறது. கணித்தமிழ் பேரவையின் பொறுப்பில் உள்ள நீங்கள் வாய்ப்பிருந்தால் ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்ற நிருவாகிகளைத் தொடர்பு கொண்டு அவர்களுக்குத் தெளிவுபடுத்துங்கள். நிதி பெற்றுக் கொண்டு கட்டுரைகளை உருவாக்கும் நடைமுறை ஏதும் தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லை. அப்படி எவராவது மன்றத்தை அணுகினால் அவர்கள் விக்கிப்பீடியா பயனரே அல்ல என்பதையும், அவர்களுக்கு நிதி வழங்கி வீணாக ஏமாற வேண்டாம் என்பதையும் கூறி அவர்களை வழிநடத்துங்கள். ஒரு விக்கிப்பீடியா கட்டுரைக்கு நிதி தேவையில்லை. விக்கிப்பீடியா கட்டுரைகள் நீக்கப்படாமல் இருக்க ஒரு நல்ல சான்றும், பொதுத் தேவை நோக்கும் முரண்பாடற்ற கருத்துகளும் இருந்தால் போதும்.
உங்கள் மாணவன் தவறு செய்யும் போது நீங்கள் கண்டித்தால், " உங்களைப் போன்ற சர்வாதிகாரிகளை நீக்கிவிட்டு நல்லவர்களை நியமியுங்கள் என்று அவர் ஓர் பரப்புரை இயக்கத்தை மேற்கொண்டால் ஏற்பீர்களா? தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பாஸ் என்று எவரும் கிடையாது. நீங்கள் உட்ப்ட ஒவ்வொரு பயனரும் பாஸ் தான். நீங்கள் தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு அதிகம் உழைத்தால் உங்களுக்கும் சர்வாதிகாரி என்ற பட்டம் கிடைக்கலாம். சிந்தியுங்கள். ஆரோக்கியமாக செயல்படுங்கள். சர்வாதிகாரி ஆண்டன் என்ற உங்கள் சொற்களை வன்மையாக கண்டிக்கிறேன். --கி.மூர்த்தி (பேச்சு) 05:48, 3 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]

கவனிக்க: @Arularasan. G, Gowtham Sampath, Kanags, Kurumban, Mayooranathan, and Nan:, @Neechalkaran, Ravidreams, Sundar, செல்வா, and தென்காசி சுப்பிரமணியன்:

@கார்தமிழ்: உங்களின் கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். நீங்கள் எழுதியுள்ள தனி மனித தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள இயலாதவை. உங்கள் கணக்கை ஏன் முடிவிலியாக தடை செய்யக்கூடாது என்பதற்கு விளக்கம் கொடுங்கள். ஒரு வாரத்திற்குள் நீங்கள் உங்களின் வன்மையான தனிமனித தாக்குதல்களுக்கு இங்கு ஆன்டன் நிர்வாகியிடம் மன்னிப்பு கோராவிட்டால், உங்கள் பயனர் கணக்கு முடிவிலியாகத் தடை செய்யப்படும். --நந்தகுமார் (பேச்சு) 07:20, 3 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]
@கார்தமிழ்: அழிக்கப்பட்ட கட்டுரைகளை நிர்வாகிகள் மீளமைக்க முடியும். அதனால் உங்கள் பங்களிப்புகள் எங்கும் போகாது. கட்டுரை விக்கியின் தரத்தில் இருந்தால் யாராவது ஒரு நிர்வாகி அதை செய்ய முடியும். அதனால் உங்கள் பங்களிப்புகள் நிரந்தரமாக அழிக்கப்பட்டதாக கருத தேவையில்லை. ஆரம்பத்தில் என் கட்டுரைகள் நீக்கப்பட்டபோதும் விக்கிப்பீடியா நிர்வாகிகள் மீது உங்களை போல் கோவப்பட்டவன் தான் நான். ஆனால் போக போக விக்கிப்பீடியா பற்றி புரிந்ததால் பழைய புரிதல் மாறிவிட்டது. உங்கள் பங்களிப்புகள் நிரந்தரமாக நீக்கப்படாது என்பதால் பொறுமையாகவே உரையாடவும். --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:07, 3 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]
தங்களின் நெறிப்படுத்தலுக்க்கு நன்றி ஐயா. கார்தமிழ் (பேச்சு) 06:29, 8 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]
கார்தமிழ் ஐயா அவர்களின் கேள்விகள் ஒருவரின் தனிமனித தாக்குதல் என்று கூறுவது தவறு. நல்ல தமிழ் கட்டுரைகளையும், தமிழ் சான்றோர்களையும் வெளிக்கொள்ள விக்கியில் தடையாக உள்ளது. விக்கி சட்டதிட்டங்கள் என்று கூறி தகுதி மிக்க கட்டுரைகளை நீக்குவது கேளியாக உள்ளது நடிகர்களுக்கு விக்கியில் முகவரி, நல்ல சிந்தனையில் எழுதும் கட்டுரைக்கு விக்கியில் தடை. நான் கார்கி தமிழ் ஐயா அவரின் கருத்தை மதிக்கிறேன். Freedom CreatorTN (பேச்சு) 03:52, 18 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]
முழு விடயமும் தெரியாமல் கருத்திட வேண்டாம்.பேச்சுப்பக்கத்தில் தகவல் உள்ளது. நன்றி AntanO (பேச்சு) 19:17, 18 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]

பராமரிப்பு தொடர்பான கேள்விகள்[தொகு]

//இந்தப் பக்கம் சற்றுமுன்னர் உருவாக்கப்பட்டது.// தொடங்கப்பட்டு ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள், வார்ப்புரு இடப்பட்டு ஏறத்தாழ மூன்றாண்டுகள். எனில் சற்றுமுன்னர் என்பதன் வரையறை என்ன? இந்தப்பக்கத்தை என்ன செய்ய வேண்டும்? 1. பயனர் வெளிக்கு நகர்த்த வேண்டுமா? எனில் அதற்கான வார்ப்புருவை எங்கே தேடுவது? 2. தோட்டக்கலை போன்ற பக்கத்துடன் இணைத்திட வார்ப்புரு இடவேண்டுமா? 3. நீக்க வேண்டி வார்ப்புரு இடவேண்டுமா? போலவே இந்தப்பக்கமும். பொதுவாக விக்கிப்பீடியா பயனர் மற்றும் பங்களிப்பாளர் நிலைகளைப் பற்றி மேலும் அறிய விளக்கப்பக்கங்கள் ஏதேனும் உள்ளனவா? --Stymyrat (பேச்சு) 09:52, 5 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]

@Stymyrat: நீங்கள் சுட்டிக் காட்டிய வார்ப்புரு தவறுதான். இரண்டும் கலைக்களஞ்சியக் கட்டுரை இல்லைதான். பொதுவாக வார்ப்புரு:Merge அல்லது வார்ப்புரு:நீக்கு பயன்படுத்தலாம். ஆனால் இவற்றைப் பொறுத்தவரை இரண்டையும் மாடித் தோட்டம்(en:Terrace_garden) என்ற தலைப்பின் கீழ் கொண்டுவரலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 11:46, 5 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]
இரண்டையும் நீக்கி விடலாம்.--Kanags \உரையாடுக 12:01, 5 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]

தவறாக பதிவேற்றிய புகைப்படங்களை எவ்வாறு நீக்குவது.[தொகு]

நான் ஒலியெழுவன், நேற்று நான் ஒரு கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது அதற்கு தேவைப்படும் புகைப்படங்களை பதிவேற்றிவிட்டு அதை இனைய பக்கத்தில் பார்க்க முயன்ற போது நான் எழுதிக்கொண்டிருந்த கட்டுரை பக்கமும் வெளியே சென்றுவிட்டது. நான் எவ்வாறு மீண்டும் இடையில் விட்ட எனது கட்டுரையை தொடர்வது தெரியவில்லை முடிந்தவரையில் நானும் விக்கிபீடியாவில் கொடுத்த தகவல்களை பார்த்தேன்.எந்த பயணும் இல்லை. எப்படி நான் பதிவெற்றிய புகைப்படத்தை நீக்குவது பற்றிய தகவல் தேவை. -−முன்நிற்கும் கருத்து Freedom CreatorTN (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Freedom CreatorTN:, உங்கள் கணக்கில் எப்பக்கமும் சேமிக்கப்படவில்லை என்பதால் நீங்கள் எழுதிக்கொண்டிருந்த கட்டுரைகளை மீண்டும் தொடரமுடியாது. பொதுவாக மணல்தொட்டியில் எழுதிச் சேமித்து, முழுமையடைந்ததும் தனிப்பக்கத்திற்கு மாற்றாலாம். பதிவேற்றிய படங்களை நீங்கள் நீக்க விரும்பினால் {{நீக்கு}} என்ற வார்ப்புருவை இடலாம். மற்றவர்கள் நீக்கிவிடுவார்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 18:41, 12 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]

கட்டுரை விரிவாக்க உதவி[தொகு]

கவிஞர் முத்துக்கூத்தன் பற்றிய அடிப்படைத் தகவல்கள் இந்த வலைப்பதிவில் மட்டுமே உள்ளது. வலைப்பதிவின் சொந்தக்காரர் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் கவிஞரின் மகனான மு. கலைவாணரிடம் பேசிப் பல தகவல்களை பெற்றிருக்கிறார். கடைசியில் இக்கட்டுரைச் செய்தியை எடுத்தாளுவோர், களஞ்சியம் உருவாக்குவோர் எடுத்த இடம் குறிப்பிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வலைப்பதிவு தகவல்களை வைத்துக் கொண்டு முத்துக்கூத்தன் கட்டுரையை விரிவாக்கலாமா? விரிவாக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ளப்படுமா? உதவுங்கள் நன்றி --சா அருணாசலம் (பேச்சு) 02:54, 21 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]

@சா அருணாசலம்: பிரபலமான ஒரு தமிழறிஞரின் வலைப்பதிவு. நிச்சயம், அதனை மேற்கோள் சுட்டி கட்டுரையை மேம்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 08:34, 21 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]
நன்றி ஐயா -- சா அருணாசலம் (பேச்சு) 08:59, 21 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]

பக்கத்தை நகர்த்தவும்[தொகு]

தமிழின குடிகளின் பட்டியல் என்ற பக்கத்தை VelKadamban/தமிழின குடிகளின் பட்டியல் என்ற பயனர் பக்கத்திற்கு மாத்த உதவுங்கள். காரணம்: துறை வல்லுநர் அல்லாதவர் எழுதிய நூலை மேற்கோளாக கொடுத்ததால் --VelKadamban (பேச்சு) 13:03, 4 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]

பயனர்:VelKadamban/தமிழின குடிகளின் பட்டியல் பக்கத்தைப் பயனர் பெயர்வெளிக்கு மாற்றியுள்ளேன். -நீச்சல்காரன் (பேச்சு) 18:08, 4 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]
நன்றி சகோ! --VelKadamban (பேச்சு) 12:54, 5 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]

கட்டுரைரைகளில் சான்றுகளை இணைத்தல், ஒளிப்படங்கள் மற்றும் பொருத்தமான வார்ப்புருவினை இணைப்பது குறித்து விளக்கம் கோருதல்.[தொகு]

துப்பரவு வார்ப்புரு பற்றி விளக்கம் பெற விரும்புகிறேன்.

Cite News மற்றும் Cite Journal குறித்த விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் தர முடியுமா?

குறிப்பிட்ட சான்றினை வேறு வேறு பத்திகளில் மீண்டும் மீண்டும் இணைப்பது குறித்து விளக்க இயலுமா?

விக்கிமீடியா காமன்சில் உள்ள ஒளிப்படங்களை இணைப்பது எப்படி? அதிக ஒளிப்படங்களை, கோவையாக இணைப்பது எப்படி?

வார்ப்புருவினை இணைப்பது குறித்தும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். Iramuthusamy (பேச்சு) 15:45, 5 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]

ARIESன் தமிழாக்கம் உதவி/வழிகாட்டல் தேவை[தொகு]

ARIES: Aryabhatta Research Institute of Observational Sciences -- ஆர்யபட்டா காட்சிப்பதிவு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்

  • observational sciences = காட்சிப்பதிவு அறிவியல்; வேறு பரிந்துரைகள் இருந்தால் தெரிவிக்கவும்

--PARITHIMATHI (பேச்சு) 01:40, 3 சூன் 2022 (UTC)Reply[பதில் அளி]

ஆர்யபட்டா கண்காணிப்பு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், கண்காணிப்பு அறிவியல் சரியாக வருமா ? --கி.மூர்த்தி (பேச்சு) 02:26, 3 சூன் 2022 (UTC)Reply[பதில் அளி]

பஞ்சப்பட்டி சட்டமன்றத் தொகுதி[தொகு]

பஞ்சப்பட்டி சட்டமன்றத் தொகுதி தொகுப்பின் தகவல் பெட்டியினை சரிசெய்ய உதவி வேண்டப்படுகிறது. --சத்திரத்தான் (பேச்சு) 15:39, 3 சூன் 2022 (UTC)Reply[பதில் அளி]

கோயில் அல்லது கோவில்[தொகு]

இலக்கண விதியின் அடிப்படையில் 'கோயில் என்பது சரியா' அல்லது 'கோவில் என்பது சரியா' என்பதில் மீண்டும் குழப்பமாக இருக்கிறது. தமிழ் விக்கியில் இது குறித்து முன்பு ஒரு உரையாடல் நடந்தது. அந்த உரையாடலுக்குச் செல்ல உதவி தேவைப்படுகிறது. நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:03, 23 சூன் 2022 (UTC)Reply[பதில் அளி]

பேச்சு:கோயில் (வழிபாட்டிடம்) இந்த இணைப்பு தங்களுக்கு உதவியாக இருக்கலாம்-- சா. அருணாசலம் (பேச்சு) 06:03, 23 சூன் 2022 (UTC)Reply[பதில் அளி]

மிக்க நன்றி @சா அருணாசலம்:--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:00, 4 சூலை 2022 (UTC)Reply[பதில் அளி]

'கட்டுரை நீக்கல்' அணுக்கம்[தொகு]

துப்புரவுப் பணியினை செய்யும்பொருட்டு 'கட்டுரை நீக்கல்' அணுக்கத்தை ஒரு பயனருக்கு அளிக்க இயலுமா? அதற்கு என்ன செய்யவேண்டும்? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:13, 4 சூலை 2022 (UTC)Reply[பதில் அளி]

கட்டுரை நீக்கல் அணுக்கம் அளிப்பது தற்போதைய சூழலில் சாத்தியமற்றது. காரணம்: கொள்கை உருவாக்கம், விக்கிச் சமூக அனுமதி பெறல், மேல் விக்கி/Phabricator இல் பதிதல் போன்ற நடைமுறைகள் உள்ளன. அதைவிடுத்து, தற்போதுள்ள நிர்வாகிகளிடமே கேட்கலாம். ஒரு வருட காலத்தில் நிர்வாகிகள் செய்த நிர்வாகப் பங்களிப்புகளை இங்கும் நிர்வாகிகளின் பட்டியலை இங்கும் காணலாம். நிர்வாகப் பங்களிப்புகளிப்பு செய்யத் தூண்டல் என்பதும் தேவையான ஒன்றே. --AntanO (பேச்சு) 04:21, 4 சூலை 2022 (UTC)Reply[பதில் அளி]

நன்றி. பயனர் மகாலிங்கம் கட்டுரையாக்கம், மேம்படுத்துதல், திருத்தங்கள் செய்வதோடு துப்புரவுப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். கலைக்களஞ்சியம் அல்லாத கட்டுரைகளை சரியான முறையில் கணித்து, நீக்கப் பரிந்துரைக்கிறார். நிர்வாகிகள் அதனை கவனித்து நீக்குகிறார்கள். நிர்வாகப் பொறுப்பு ஏற்க அவர் முன்பு மறுத்துவிட்ட காரணத்தால், இந்த அணுக்கத்தையாவது அவர் ஏற்றுக்கொள்வாரா என்பது குறித்து வேண்டுகோள் வைக்க நினைத்திருந்தேன். அதற்கு முன்னதாக, அதற்குரிய சாத்தியங்களை அறிய முற்பட்டேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:11, 4 சூலை 2022 (UTC)Reply[பதில் அளி]

பகுப்புகள் சேர்வது தொடர்பான கேள்வியும், உதவி கோரலும்[தொகு]

எடுத்துக்காட்டாக, ஆசிய நாடுகளின் பட்டியல் எனும் கட்டுரையில் ஏராளமான பகுப்புகள் சேர்ந்துள்ளன. இவை எப்படி சேர்கின்றன? இப்பகுப்புகளை நாம் உருவாக்கினால், எந்த வகையில் உதவக்கூடியவை? சேரும் பகுப்புகளை தடுக்க இயலாதா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:43, 21 சூலை 2022 (UTC)Reply[பதில் அளி]

வார்ப்புரு:Lang என்ற வார்ப்புருவில் செய்த மாற்றமே இவ்வாறு பகுப்புகள் சேர்ந்திருக்கின்றன. இவ்வார்ப்புருவை முந்தைய மாற்றத்திற்கு மீள்வித்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 22:09, 21 சூலை 2022 (UTC)Reply[பதில் அளி]

பேருதவி; மிக்க நன்றி! ஒரே ஒரு திருத்தத்தின் மூலமாக, சுமார் 3,000 கட்டுரைகளில் துப்புரவு நடந்துள்ளது. காண்க: சிறப்பு:Wantedcategories --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:13, 22 சூலை 2022 (UTC)Reply[பதில் அளி]

இன்று தொடங்கப்பட்ட ஆர்யன் தாரி என்ற கட்டுரையிலும் CS1 Norwegian-language sources (no) என்ற பகுப்பு வந்துள்ளது--கி.மூர்த்தி (பேச்சு) 05:50, 22 சூலை 2022 (UTC)Reply[பதில் அளி]
Y ஆயிற்று. விக்கி மொழிபெயர்ப்புக் கருவி மூலம் மொழிபெயர்ப்பதால் இத்தவறுகள் இடம்பெறுகின்றன என நம்புகிறேன்.--Kanags \உரையாடுக 09:34, 22 சூலை 2022 (UTC)Reply[பதில் அளி]

@Kanags: துப்புரவுப் பணி தொடர்பான உதவிகளுக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:30, 23 சூலை 2022 (UTC)Reply[பதில் அளி]

மணல்தொட்டி தொகுப்பு 1 பழுது நீக்கம் - உதவி[தொகு]

பயனர்:Iramuthusamy

என்னுடைய மணல்தொட்டி தொகுப்பு 1 ஐ பயன்படுத்த இயலவில்லை. இது குறித்து உதவி கோருகிறேன். பயனர்கள், நிர்வாகிகள் யாரேனும் உதவ வேண்டுகிறேன். இரா.முத்துசாமி (பேச்சு) 15:24, 23 சூலை 2022 (UTC)Reply[பதில் அளி]

வணக்கம், இங்குஉள்ள உங்களது மணல்தொட்டி தொகுப்பு 1 ஐ பயன்படுத்த முடிகிறது.உங்களுக்கு என்ன பிழை வருகிறது என்பதனை கூற இயலுமா? ஸ்ரீதர். ஞா (✉) 15:41, 23 சூலை 2022 (UTC)Reply[பதில் அளி]
மணல்தொட்டி தொகுப்பு 1 மீது திரைக்குறியை (Cursor) வைத்துச் சொடுக்கினால் பயனர் இடைமுகம் (User interface) திறப்பதில்லை. இதுவே சிக்கல். உதவி வேண்டுகிறேன் ஐயா. இரா.முத்துசாமி (பேச்சு) 19:08, 25 சூலை 2022 (UTC)Reply[பதில் அளி]
@Neechalkaran: உதவவும்.ஸ்ரீதர். ஞா (✉) 04:10, 26 சூலை 2022 (UTC)Reply[பதில் அளி]
@Iramuthusamy:, நீங்கள் ஏற்கனவே "மணல்தொட்டி தொகுப்பு1" இல் தான் இருக்குறீர்கள் அதனால் அதை மீண்டும் சொடுக்க இயலாது. தொகுக்க விரும்பினால் நேரடியாக "தொகு" பொத்தான் மூலம் செய்யலாம். அல்லது இப்பக்க உள்ளடக்கத்தை வேறு பக்கத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 04:24, 26 சூலை 2022 (UTC)Reply[பதில் அளி]


தமிழ் இலக்கணம் சார்ந்த கட்டுரைகள் துப்புரவு குறித்து[தொகு]

@உலோ.செந்தமிழ்க்கோதை:, @Sengai Podhuvan: தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகளில் இந்த வகையான கட்டுரைகளைத் தக்க வைப்பது குறித்து தங்கள் உதவி தேவை.--TNSE Mahalingam VNR (பேச்சு) 14:32, 15 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]

தலைப்பு நகர்த்துதல்[தொகு]

வணக்கம், கட்டுரைத் தலைப்பில் சிறிய பிழை (எழுத்துப் பிழை, தட்டச்சுப் பிழை) இருந்தால் கட்டுரை உருவாக்காத நபரால் சரியான தலைப்புக்கு மாற்ற அனுமதி உள்ளதா சிறிய பிழையாக இருந்தாலும் தகுந்த உரையாடல் மூலம் தான் மாற்ற வேண்டுமா? ஸ்ரீதர். ஞா (✉) 14:30, 30 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]

சில கட்டுரைகளில் கட்டுரை உருவாக்கியவருக்கே தெரியாமல் எழுத்துப் பிழை, தட்டச்சுப் பிழை போன்றவை இருப்பதுண்டு. அவற்றை உரையாடல் இன்றியே மாற்றலாம், தொகுப்புச் சுருக்கத்தில் உரிய விளக்கத்தை அளித்தால் போதும் என்று கருதுகிறேன். ஏதாகினும் ஐயமோ, தயக்கமோ இருந்தால் உரிய வார்ப்புருவை இட்டும், பேச்சுப்பக்கத்தில் பெயரில் உள்ள பிழையை சுட்டிக்காட்டலாம்.--கு. அருளரசன் (பேச்சு) 14:39, 30 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]
நன்றிங்க. ஸ்ரீதர். ஞா (✉) 14:47, 30 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]

சேவைக்கு வாழ்த்துக்கள்[தொகு]

ஐயா தங்களின் மேலான சேவைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்கள் சேவைகளை மக்கள்பெற்று பயன்பெற வாழ்த்துகிறேன். 2001:861:E382:A0D0:50E5:8798:56B:FE06 09:12, 7 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

பௌத்த அறிஞர் ஜி. அப்பாதுரையார்[தொகு]

அப்பாதுரையார் என்றாலே பலரின் நினைவுக்கு வந்து செல்பவர் பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையாரே. பன்மொழிப் புலவருக்கு முன்பு அப்பாதுரையார் என்ற பெயரில் புகழப் பெற்று விளங்கியவர் கேப்ரியல் ஜி. அப்பாதுரையார் ஆவார். இவர் அயோத்திதாச பண்டிதரின் பௌத்த பணிகளில் பெரும் ஈர்ப்புக் கொண்டு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் பௌத்தம் ஏற்றுத் தங்க வயல் பகுதியில் பௌத்தம் பணிகளை மேற்கொண்டு வந்தார். பௌத்தம் பரப்புவதில் அயோத்திதாசருக்குப் பிறகான தலைவராக அறியப்பட்டார்.

ஜி. அப்பாதுரையார் 15.5.1890 இல் பிறந்தவர். பூர்வீகம் சேலம் என்றாலும் இளம் வயதிலேயே தந்தையாரின் பணி நிமித்தமாகக் குடும்பத்துடன் கோலார் தங்கவயல் பகுதியில் குடியமர்ந்தனர்.  தங்கவயலில் பகுத்தறிவு, பௌத்த அறிவு இயக்கமாகத் தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கத்தின் கிளை சங்கம்(1907) செயல்பட்டு வந்தது. அதன் பணிகள் அப்பாதுரையாரை வெகுவாக ஈர்த்தன. கிறித்துவ பின்புலம் உடைய குடும்பத்தில் இருந்து வந்தாலும் பௌத்த சங்கத்தில் இணைந்து பணியாற்றுவது அவரது பெரு விருப்பமாக இருந்தது. 122.165.55.9 11:19, 8 அக்டோபர் 2022 (UTC)Reply[பதில் அளி]

தகவல் சட்டத்தில் திருத்த உதவி[தொகு]

கோவா (மாநிலம்) கட்டுரையின் தகவல் சட்டத்தில் ஆளுநர், முதல்வர் போன்றவர்களின் பெயர்களை இற்றைப்படுத்த முடியவில்லை நுட்பம் தெரிந்தவர்கள் இற்றைப்படுத்துங்கள் நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 00:17, 13 அக்டோபர் 2022 (UTC)Reply[பதில் அளி]

உதவி[தொகு]

பயனர்களின் பங்களிப்புப் தரவரிசையை அறிந்துகொள்ள RANK இந்த இணைப்பு முன்பு உதவியது. ஆனால் இப்போது இங்கு தகவல்கள் இற்றையாவதில்லை. இற்றையாகும் உரிய இணைப்பினை சுட்டிக்காட்டி உதவவும்; நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:27, 11 திசம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

மேற்சொல்லப்பட்ட தரவுப் பக்கத்தை இற்றை செய்பவர் விக்கிமீடியாவில் இருந்து இளைப்பாறி விட்டார். எனவே இது இப்போது இற்றையாவதில்லை. இந்தப் பக்கத்தில் சில வேளை நீங்கள் தேடுவது கிடைக்கலாம். தேடிப் பார்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 10:58, 12 திசம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

@Kanags: உதவிக்கு நன்றி. நீங்கள் தந்த இணைப்பு மிகவும் பயனுள்ளது. எனினும் இதில் நான் தேடுவது கிடைக்கவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:16, 12 திசம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

@Neechalkaran: இந்த உரையாடலின் ஆரம்பத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தரவுப் பக்கத்தை இற்றை செய்ய இயலுமா? கவனிக்கவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:24, 12 திசம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

அப்பக்கத்தை இற்றை செய்ய அணுக்கமில்லை ஆனால் அவற்றில் உள்ள பட்டியல்களுக்கான இன்றைய தரவுகளைத் திரட்ட முடியும். எந்தக் குறிப்பிட்ட அட்டவணையை எதிர்பார்க்கிறீர்கள் என்று கூறினால், முயல்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 17:00, 12 திசம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

@Neechalkaran: (1) 50 recently active wikipedians, excl. bots ordered by number of contributions, (2) 20 recently absent wikipedians, ordered by number of contributions ஆகியன. முதலாவது அட்டவணைக்கு 100 தரவுகள், இரண்டாம் அட்டவணைக்கு 50 தரவுகள் என இருந்தால் நன்று. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:19, 19 திசம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

தொடருந்து நிலையங்கள்[தொகு]

தொடருந்து நிலையங்கள் தொகுப்பில் கட்டுரையின் முதன்மை தகவல், தகவல் பெட்டியினுள் வெளியாகியுள்ளது. இதனை சரிசெய்வது எவ்வாறு. தகவல்பெட்டி மேம்பாட்டினால் இப்பிழை ஏற்பட்டுள்ளதா என்பதை தெரிவிக்கம். உ.ம். ஆயிரம்விளக்கு மெற்றோ நிலையம் மற்றும் திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம் --சத்திரத்தான் (பேச்சு) 15:39, 25 திசம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

மூல வார்ப்புருவில் அண்மையில் ஏதும் திருத்தங்கள் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. உப வார்ப்புருக்கள் அல்லது Module களில் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கலாம். பார்க்கலாம்.--Kanags \உரையாடுக 22:33, 25 திசம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
தகவலுக்கு நன்றி. சத்திரத்தான் (பேச்சு) 00:07, 26 திசம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

ஊராட்சித் தகவல் பெட்டி[தொகு]

ஊராட்சிகளின் தகவல் பெட்டிகளில் சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சிப் பெயர் வெளிப்படுவது போல் மக்களவை உறுப்பினர்களின் கட்சிப் பெயர் வெளிப்படுவது இல்லை. இதைச் சரி செய்ய இயலுமா? சுப. இராஜசேகர் (பேச்சு) 10:42, 27 திசம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

@சுப. இராஜசேகர்: எடுத்துக்காட்டுக்கு ஒரு கட்டுரையின் பெயரைக் குறிப்பிட்டால் இலகுவாக இருக்கும். நன்றி.--Kanags \உரையாடுக 11:36, 27 திசம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
எடுத்துக்காட்டு வேளானந்தல் ஊராட்சி சுப. இராஜசேகர் (பேச்சு) 12:05, 28 திசம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
@Neechalkaran: வார்ப்புருவில் மாற்றம் செய்ய முடியுமா?--Kanags \உரையாடுக 22:46, 28 திசம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

சட்டமன்றத் தொகுதி தகவல் பெட்டி[தொகு]

ஆங்கிலத்தில் உள்ள இந்த வார்ப்புருவை en:Template:Infobox Indian state legislative assembly constituency த.வி.யிலும் உருவாக்க கேட்டுக்கொள்கிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 17:02, 29 திசம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

தமிழ்நாடு உட்பட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இந்தத் தகவல் பெட்டி இணைக்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 21:46, 29 திசம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

அருணாசலம், Kanags, நன்றி!--சத்தியராஜ் (பேச்சு) 14:56, 1 சனவரி 2023 (UTC)Reply[பதில் அளி]

பக்கவழி நெறிப்படுத்தல் பக்கத்தில் 'சான்றில்லை' வார்ப்புரு[தொகு]

அணி எனும் பக்கமானது ஒரு பக்கவழி நெறிப்படுத்தல் ஆகும். Bot ஒன்றின் மூலமாக, 'சான்றில்லை' வார்ப்புரு முன்பு இடப்பட்டுள்ளது. இது போன்று பல பக்கங்களில் இடப்பட்டிருக்கும் என ஐயப்படுகின்றேன். இதனை தானியங்கி மூலமாக சரிசெய்ய வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:54, 27 சனவரி 2023 (UTC)Reply[பதில் அளி]

InternetArchiveBot[தொகு]

InternetArchiveBot இவ்வாறான பிழையான மாற்றங்களை செய்கிறது. கவனிக்கவும். --சத்தியராஜ் (பேச்சு) 08:52, 15 பெப்ரவரி 2023 (UTC)Reply[பதில் அளி]

வழு[தொகு]

திருக்குறள் உள்ளிட்ட பல கட்டுரைகளில் Lua error in Module:Footnotes at line 275: attempt to call field 'has_accept_as_written' (a nil value). எனும் வழு காணப்படுகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:05, 26 பெப்ரவரி 2023 (UTC)Reply[பதில் அளி]

{{Sfn}} வார்ப்புருவிலுள்ள pp என்ற மாறிலியில் தான் சிக்கலெனத் தெரிகிறது. அவற்றை நீக்கினால் வழு காட்டவில்லை. ஆனால் இது எத்தனை நாளாக இருக்கிறது, அண்மையில் [1] மாற்றத்தினாலா போன்று அறிந்து மீளமைக்க வேண்டும். @Kanags: கவனிக்க இயலுமா?-நீச்சல்காரன் (பேச்சு) 14:17, 26 பெப்ரவரி 2023 (UTC)Reply[பதில் அளி]
இந்தத் திருத்தத்தை மீளமைத்திருக்கிறேன். இப்போது வழு இல்லை.--Kanags \உரையாடுக 07:45, 27 பெப்ரவரி 2023 (UTC)Reply[பதில் அளி]

இருவருக்கும் நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:05, 27 பெப்ரவரி 2023 (UTC)Reply[பதில் அளி]

ஒற்று வருமா வராதா[தொகு]

மத்திய பிரதேசம் <--> மத்தியப் பிரதேசம், எது சரி? சமீபத்தில சில பக்க நகர்த்தல்கள் நடைபெற்றுள்ளன. எ. கா.: மத்திய பிரதேசம். @Vp1994: உங்கள் கருத்துக்களும் தேவை. --சத்தியராஜ் (பேச்சு) 15:37, 12 மார்ச் 2023 (UTC)Reply[பதில் அளி]

ஒற்று வரும். பயனர்:Vp1994 அவர்களின் பதிலுக்காக 3 நாட்கள் காத்திருப்போம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:43, 12 மார்ச் 2023 (UTC)Reply[பதில் அளி]
ஒற்று மிகும். @Vp1994: உங்களது திருத்தத்தை மீளமைக்க இயலுமா? -நீச்சல்காரன் (பேச்சு) 16:35, 12 மார்ச் 2023 (UTC)Reply[பதில் அளி]
@Raj.sathiya:, @Neechalkaran:, @Vp1994: திருத்தங்களை மீளமைத்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:17, 15 மார்ச் 2023 (UTC)Reply[பதில் அளி]
நன்றி! --சத்தியராஜ் (பேச்சு) 06:46, 16 மார்ச் 2023 (UTC)Reply[பதில் அளி]
@Selvasivagurunathan m:, மத்திய பிரதேச சட்டமன்றம் - இந்த பக்கத்தையும் நகர்த்தக் கேட்டுக்கொள்கிறேன்.--சத்தியராஜ் (பேச்சு)
Y ஆயிற்று-நீச்சல்காரன் (பேச்சு) 09:37, 16 மார்ச் 2023 (UTC)Reply[பதில் அளி]
நன்றி! --சத்தியராஜ் (பேச்சு) 09:40, 16 மார்ச் 2023 (UTC)Reply[பதில் அளி]

பெல்காம் - பெளகாவி[தொகு]

கட்டுரைகளின் தலைப்பில் பெல்காம் என ஆங்கில ஒலிப்பில் குறிப்பிடும்போது கரமும், பெளகாவி என கன்னட ஒலிப்பில் குறிப்பிடும்போது கரமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டுரைகளை உருவாக்கும்போது பெலகாவி என எழுத முற்பட்டுள்ளேன். எது சரியாக இருக்கும்? --சத்தியராஜ் (பேச்சு) 07:50, 23 மார்ச் 2023 (UTC)Reply[பதில் அளி]

நூலோதி[தொகு]

தமிழக ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளில், மேற்கோள்கள் பகுதியில் "நூலோதி" எனும் தலைப்பின் கீழ் நூல்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இச்சொல் தமிழகராதியில் இருக்கிறதா? இருப்பின், இதன் பொருளென்ன? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:25, 25 மார்ச் 2023 (UTC)Reply[பதில் அளி]

நூலோதி என்பது நூற்பட்டியல் ஆகும். --சத்திரத்தான் (பேச்சு) 17:11, 1 ஏப்ரல் 2023 (UTC)Reply[பதில் அளி]

ஐயம்[தொகு]

தானியங்கி மொழிபெயர்ப்பு வாயிலாக ஒரு கட்டுரைத் தலைப்பை தொடங்கும்போது, அந்தத் தலைப்பு ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்தாலும், புதிய கட்டுரையை தொடங்க முடியுமா? கிருஷ்ணன்கோவில் (நாகர்கோவில்) எனும் கட்டுரையின் வரலாற்றைப் பாருங்கள்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணன்கோயில் பற்றிய கட்டுரை, நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணன்கோவில் பற்றிய கட்டுரையாக மாறியுள்ளது. (விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணன்கோயில் பற்றிய கட்டுரை இன்னொரு பயனரால், பின்னொரு நாளில் எழுதப்பட்டுவிட்டது. எனவே இப்போது வேறொன்றும் செய்யவேண்டியதில்லை) இது பிரச்சனையான ஒன்று. இதே நிலை இப்போதும் உள்ளதா? -- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:30, 1 ஏப்ரல் 2023 (UTC)Reply[பதில் அளி]

தானியங்கி மொழிபெயர்ப்பு வாயிலாக ஒரு கட்டுரைத் தலைப்பை தொடங்கும்போது, அந்தத் தலைப்பு ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்தாலும், புதிய கட்டுரையை தொடங்க முடியுமா? குறிப்பிட்ட கட்டுரையின் தமிழாக்கம் இல்லையென்றால் தொடங்க இயலும். ஆனால் கட்டுரையினை பதிப்பிக்கும் போது எச்சரிக்கை வரும். இதில் இத்தலைப்பில் ஏற்கனவே கட்டுரை உள்ளது, அதனை அழித்து சேமிக்கவா என எச்சரிக்கை வரும். இதன் மூலம் கட்டுரையின் பொருள் அடிப்படையில் தலைப்பினை உறுதி செய்து விளக்கத்துடன் பதிப்பிக்கலாம். உம். சனந்தா என்று நான் உருவாக்கிய தொகுப்பின் பெயரில் கட்டுரை (சனந்தா) உள்ளதால் சனந்தா (இதழ்) என உருவாக்கியுள்ளேன். --சத்திரத்தான் (பேச்சு) 17:20, 1 ஏப்ரல் 2023 (UTC)Reply[பதில் அளி]
ஆம்.பழைய பதிவுகளை அழித்துவிட்டு பதிவேற்றம் செய்யும். சமூக ஒப்புதலோடு இதனை தடுக்க இயலும். ஸ்ரீதர். ஞா (✉) 18:08, 1 ஏப்ரல் 2023 (UTC)Reply[பதில் அளி]

இது பிரச்சனைதான். நன்கு எழுதப்பட்டிருக்கும் கட்டுரை சிதைவடையும் ஆபத்துள்ளது. தொடங்க இயலாதவாறு தடுக்க வேண்டும். அறிந்த பயனர்கள் கவனத்துடன் செய்வர். அறியாதோர் பிழை செய்துவிடுவர். கருங்கல் எனும் கட்டுரையின் வரலாற்றையும் காணுங்கள். (அருளரசன் அவர்கள் இப்போது சரிசெய்துள்ளார்) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:34, 1 ஏப்ரல் 2023 (UTC)Reply[பதில் அளி]

விக்கிப்பீடியா வழங்கும் தானியங்கி மொழிபெயர்ப்புக் கருவியை நான் என்றுமே பயன்படுத்தியதில்லை. இக்கருவியில் பல சிக்கல்கள் உள்ளன போல் தெரிகிறது. தயிர் கட்டுரையில் அண்மையில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றத்தைப் பாருங்கள். இது விக்கிப்பீடியாவின் தானியங்கி மொழிபெயர்ப்பியைக் கொண்டு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது போன்ற தவறுகள் எவ்வாறு ஏற்படுகின்றது? பல கட்டுரைகளில் இத்தவறுகள் வருகின்றன.--Kanags \உரையாடுக 23:08, 1 ஏப்ரல் 2023 (UTC)Reply[பதில் அளி]

கடலியல் கட்டுரையில் ஒரு ஆசிரியர் செய்துள்ளதை அதன் வரலாற்றில் பாருங்கள். தெரிந்து செய்தாரோ, தெரியாமல் செய்தாரோ! (தானியங்கி மொழிபெயர்ப்புக் கருவிக்கும் இந்த அபத்தத்திற்கும் சம்பந்தமில்லை என நினைக்கிறேன். பெரியளவில் பயிற்சி வகுப்புகள் நடத்துவது ஆபத்தே). --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:09, 3 ஏப்ரல் 2023 (UTC)Reply[பதில் அளி]

நாகேஷ் நடித்த திரைப்படங்கள்[தொகு]

நாகேஷ் அவர்கள் நடிக்காத திரைப்படங்களில் (நாகேஷ் நடித்த திரைப்படங்கள்) என்ற பகுப்பு தவறுதலாக பல பக்கங்களில் இணைக்கப்பட்டுள்ளது. வலையொளியில் தேடிப் பார்த்ததில் பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்திருக்கவில்லை. குறிப்பாக சொந்தம் என்ற திரைப்படத்திலும், எங்கள் தாய் என்ற திரைப்படத்திலும் அவர் நடிக்கவில்லை. இருந்தாலும் குறிப்பிட்ட இரண்டு திரைப்படக் கட்டுரைப் பக்கத்திலும் நாகேஷ் நடித்த திரைப்படங்கள் என்ற பகுப்பு இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுப்பினை ஆராய்ந்து மாற்ற வேண்டியது அவசியமாகிறது.-- சா. அருணாசலம் (பேச்சு) 17:11, 24 ஏப்ரல் 2023 (UTC)Reply[பதில் அளி]

பாக்கித்தான்[தொகு]

பாக்கித்தான் கட்டுரையில் புகுபதிகை செய்யாத பயனர்கள் விசமத் தொகுப்புகளைச் செய்து வருகின்றனர். அதைத் தடுக்கும் விதமாக கட்டுரையை காப்பு செய்ய முற்பட்டால், கட்டுரையை நிருவாகிகள் மட்டும் தொகுக்கும் விதமாக அன்றனால் முடிவிலி நேரத்திற்கு காப்பு செய்துள்ளதாக தெரியவருகிறது. ஆனால் அதையும் மீறி விசமத் தொகுப்பு எவ்வாறு நடந்ததுள்ளதே. காப்பில் ஏதாவது வழு ஏற்பட்டுள்ளதா.--கு. அருளரசன் (பேச்சு) 15:30, 12 மே 2023 (UTC)Reply[பதில் அளி]

இப்போதுதான் கவனித்தேன் கட்டுரையை நகர்த்துவதை மட்டும் காப்பு செய்துள்ளார் என்று தற்போது தொகுப்பதை காப்பு செய்துள்ளேன்--கு. அருளரசன் (பேச்சு) 15:36, 12 மே 2023 (UTC)Reply[பதில் அளி]
ஆம். அதனால்தான் தற்பொழுது நிர்வாகிகள் மட்டும் (ஒரு வார கால அளவிற்கு) தொகுக்கும் வகையில் காப்பு செய்துள்ளேன் ஸ்ரீதர். ஞா (✉) 16:37, 12 மே 2023 (UTC)Reply[பதில் அளி]
இந்தப் பயனர் (ஒருவராகத்தான் இருக்க வேண்டும்) பல கட்டுரைகளில் பல்வேறு ஐபி-களில் வந்து விசம (அரசியல்) தொகுப்புகளைச் செய்கிறார். இவற்றைத் தடுப்பது இயலாத காரியம். புகுபதிகை செய்பவர்களை மட்டும் ஓராண்டு காலத்திற்கு அனுமதிக்கலாம்.--Kanags \உரையாடுக 23:07, 12 மே 2023 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம்--AntanO (பேச்சு) 14:59, 13 மே 2023 (UTC)Reply[பதில் அளி]

பெயரிடல் மரபு?[தொகு]

Ordnance Factory Board என்பது படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியம் என்று தமிழிலும் Advanced Weapons and Equipment India என்பது அட்வான்ஸ்டு வெப்பன்ஸ் அண்டு எகிப்மெண்ட்ஸ் இந்தியா லிமிடெட் என்று தமிங்கிலத்திலும் உள்ளன. இந்த ஏரணம் விளங்கவில்லை. இதனைச் சரிப்படுத்தாதவிடத்து சிக்கலான பெயரிடல் மரபு உருவாகிவிடும். @எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, Balu1967, Sridhar G, சத்திரத்தான், சா அருணாசலம், Almighty34, TNSE Mahalingam VNR, Selvasivagurunathan m, and Neechalkaran: ~AntanO4task (பேச்சு) 14:34, 16 மே 2023 (UTC)Reply[பதில் அளி]

@எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: வணக்கம் ஐயா. இந்த இரண்டு பக்கங்களை உருவாக்கியவர் நீங்கள் என்பதால் பதிலளிக்க வேண்டுகிறோம்.--சா. அருணாசலம் (பேச்சு) 14:43, 16 மே 2023 (UTC)Reply[பதில் அளி]
அட்வான்ஸ்டு வெப்பன்ஸ் அண்டு எகிப்மெண்ட்ஸ் இந்தியா லிமிடெட் என்ற கட்டுரைத் தலைப்பை மாற்றவும். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 02:02, 17 மே 2023 (UTC)Reply[பதில் அளி]
@சா அருணாசலம் and Sridhar G: இக்கட்டுரையை ஒரு எடுத்துக்காட்டுக்காகவே குறிப்பிட்டேன். இங்கு இன்னும் சில கட்டுரைகள் உள்ளன. பெயரிடல் மரபில் உள்ள குழப்பம், தானியங்கி மொழிபெயர்ப்பியை அவ்வாறே பயன்படுத்தல், புதிய கட்டுரை உருவாக்கத்தை கண்காணிக்காமை போன்ற காரணிகள் இது போன்ற சிக்கல்களின் பின்னால் உள்ளன.--AntanO (பேச்சு) 13:25, 20 மே 2023 (UTC)Reply[பதில் அளி]
வணக்கம், விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு இற்றை செய்யப்படாமல் இருப்பதும் போதிய தகவல் இல்லாமல் இருப்பதும் இதன் முக்கியக் காரணமாக நான் பார்க்கிறேன். பெயரிடல் மரபில் நிறுவனங்களின் பெயர்களுக்கான வழிகாட்டல் இல்லாமையால் பயனர்களுக்கு சுட்டிக் காட்டுவதில் சிக்கல் எழுகிறது.இயன்றவரையில் கொள்கைகளை வகுத்து அதன்படி செயல்படக் கோரலாம். நிறுவனங்களின் பெயர்கள் என்பதில் அனைவரது கருத்துகளும் வரவேற்கப்படுகிறது.நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 14:45, 20 மே 2023 (UTC)Reply[பதில் அளி]

தேர்தல் வார்ப்புரு[தொகு]

Infobox election இல் தலைவர் என்பதில் சிக்கல் வருகிறது. தலைவர் வேறு முதல்வர் வேறு என்னும் போது முதல்வர் படத்தை தலைவரில் இடுவது சரியா? எகா 2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்--குறும்பன் (பேச்சு) 23:07, 20 மே 2023 (UTC)Reply[பதில் அளி]

Deleting article[தொகு]

Is there anyone who can help me get this article delete:-

கோபால் சந்திர முகோபாத்யாய்

It was deleted on English Wikipedia:-

https://en.wikipedia.org/wiki/Wikipedia:Articles_for_deletion/Gopal_Chandra_Mukhopadhyay

It needs to be deleted here as well. Thanks. Editorkamran (பேச்சு) 04:17, 10 சூன் 2023 (UTC)Reply[பதில் அளி]

@Editorkamran: you can nominate for deletion. --AntanO (பேச்சு) 19:36, 11 சூன் 2023 (UTC)Reply[பதில் அளி]
AntanO I don't know how that is done here. Can you nominate for me? Editorkamran (பேச்சு) 05:57, 12 சூன் 2023 (UTC)Reply[பதில் அளி]

ஹரிப்பிரியா[தொகு]

ஹரிப்பிரியா என்ற இராகம் தொடர்பான பக்கம் Hariprriya என்ற நடிகையின் ஆங்கிலப் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நீக்கலுக்கான உதவி தேவை. --சா. அருணாசலம் (பேச்சு) 11:17, 14 சூன் 2023 (UTC)Reply[பதில் அளி]

Y ஆயிற்று--Kanags \உரையாடுக 11:27, 14 சூன் 2023 (UTC)Reply[பதில் அளி]

சட்டமன்றம் - சட்டப் பேரவை[தொகு]

இந்திய மாநிலங்களின் சட்டமன்றங்களை சட்டமன்றம் என்றும் சட்டப் பேரவை எனவும் இருவேறு வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டு:

பொதுவான சொல்லாடல் வேண்டும். சில மாநிலங்களில் கீழவை, மேலவை என இரு அவைகள் உள்ளன. பொதுவான கட்டுரைத் தலைப்புகள் இருந்தால் வார்ப்புரு:Infobox Indian constituencyயில் பயன்படுத்த இலகுவாக இருக்கும். பின்வருமாறு பொதுவாக பயன்படுத்தலாமா?

  • Legislature - சட்டமன்றம்
எ.கா. Karnataka Legislature - கர்நாடக சட்டமன்றம்
  • Legislative Council (மேலவை) - சட்ட மேலவை
எ.கா. Telangana Legislative Council - தெலங்காணா சட்ட மேலவை
  • Legislative Assembly (கீழவை) - சட்டப் பேரவை
எ.கா. Tamil Nadu Legislative Assembly - தமிழ்நாடு சட்டப் பேரவை

வழிகாட்டுதல் தேவை. --சத்தியராஜ் (பேச்சு) 16:48, 22 சூன் 2023 (UTC)Reply[பதில் அளி]

சட்டப் பேரவை, சட்டமன்றம் இரண்டும் ஒன்றையே குறிக்கின்றன. தமிழ்நாட்டில் அதிகாரபூர்வமாக எவ்வாறு அழைக்கப்படுகிறதோ அவ்வாறு இங்கும் தலைப்பிடுவது சரியாக இருக்கும். ஏனைய மாநிலங்களுக்கும் அதே பெயரையே தர வேண்டும். இரு அவைகள் உள்ள மாநிலங்களுக்கு மேலவைக்கு மட்டும் மேலவை என்ற பின்னொட்டுடன் - (மேலவை) என்றவாறு - தலைப்பிடலாம். இது எனது கருத்து.--Kanags \உரையாடுக 06:17, 23 சூன் 2023 (UTC)Reply[பதில் அளி]
குறிப்பு: அதிகாரப்பூர்வமாக Tamil Nadu Legislative Assembly என்பதை தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை என்று குறிப்பிடுகின்றனர், பார்க்க: [2].

மேற்கோள் பிழைகள்[தொகு]

CS1 பிழைகள் என்பதன் பொருள் என்ன?

பகுப்பு:Pages with citations using unsupported parameters என்பதுவும் CS1 பிழைகளுள் அடங்குமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:44, 5 ஆகத்து 2023 (UTC)Reply[பதில் அளி]

en:Help:CS1 errors & en:Help:Citation Style 1 AntanO (பேச்சு) 05:18, 17 ஆகத்து 2023 (UTC)Reply[பதில் அளி]

வரைவு - பகுப்பு[தொகு]

வரைவுகளுக்கான பகுப்பு உள்ளதா? இல்லாமவிடத்து உருவாக்கினால் கவனிப்பது இலகுவாகும். AntanO (பேச்சு) 05:20, 17 ஆகத்து 2023 (UTC)Reply[பதில் அளி]

தொடர்பு இழந்த இணைப்பினை நீக்கலாமா?[தொகு]

பல கட்டுரைகளின் வெளியிணைப்புகளில் சில தொடர்பு இழந்து காணப்படுகிறது. அவற்றை நீக்கலாமா? எடுத்துக்காட்டுக்கு,

// "Anthemis pyrethrum record n° 135636". African Plants Database. Natural History Museum of Geneva and Tela Botanica. 2008-06-16 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]//

காண்க 2: அக்கராகாரம் உழவன் (உரை) 01:55, 12 செப்டம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]

@Info-farmer: அக்கராகாரம் கட்டுரையின் தொடர்பிழந்த இணைப்பை சரி செய்திருக்கிறேன். InternetArchiveBot இவ்வாறு பல தவறுகள் விட்டுள்ளது. முறைப்பாடு பதியப்பட வேண்டும். பொதுவாக மேற்கோள்களில் உள்ள இணைப்புகள தொடர்பிழந்ததாக இருந்தால், அதற்கான சரியான இணைப்போ அல்லது அது தொடர்பான வேறு ஒரு இணைப்போ தந்த பின்னர் அதனை நீக்குவதே சரியாக இருக்கும்.--Kanags \உரையாடுக 09:05, 12 செப்டம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]
தெளிவுப் பெற்றேன். நன்றி. இப்பக்கத்தில் அதுபோல மாற்றங்களை ஏற்படுத்தினேன். முன்பு நக்கீரன் இணைய இதழில் இணைப்பு முறிவு இருந்தது. அத்தளத்தில் தேடிப்பார்த்தேன். இயலவில்லை. பிறகு இணையத்தில் தேடி இந்த இணைப்பினைக் கொடுத்துள்ளேன். ஆனால், நாம் பொதுவாக வலைப்பூ பக்கத்தினை ஆதாரங்களாகக் கொள்வதில்லை. எனினும் கட்டுரையாளர் மருத்துவர் என்பதால் அதன் உறுதித்தன்மை ஏற்றுக் கொள்ளக்கூடியதே. ஏறத்தாழ 9000 கட்டுரைகளில் இதுபோன்று தொடர்பிழந்த இணைப்புகள் உள்ளன. அவ்வப்போது சீர் செய்வேன். தானியங்கிக் கொண்டு துப்புரவு பணிகள் ஏதேனும் இருப்பின் அறியத் தருக. பைவிக்கித்தானியங்கி நுட்பம் கொண்டு துப்புரவு செய்ய விரும்புகிறேன். உழவன் (உரை) 00:34, 13 செப்டம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]
@Info-farmer: அசோகு கட்டுரையில் சரியான இணைப்பைத் தந்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 03:41, 13 செப்டம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]

சரி பார்த்து நகர்த்த வரைவு வேண்டுகோள்[தொகு]

நான் எழுதிய இந்த கட்டுரையை வரைவு:நளினி நெட்டோ தானியங்க மொழிபெயர்ப்பு போன்ற ஏதாவது உள்ளதா என்று சரி பார்த்து நகர்த்த வேண்டுகிறேன். அவ்வாறு ஏதாவது இருந்தால் மேம்படுத்துங்கள் எனக்கும் தெரிவியுங்கள் நன்றி. ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 08:27, 20 செப்டம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]

Y ஆயிற்று--கு. அருளரசன் (பேச்சு) 10:17, 20 செப்டம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]
@Arularasan. G
நன்றி
மிக்க நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 13:00, 20 செப்டம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]


நான் இரண்டு கட்டுரைகளை உருவாக்கியுள்ளேன் வரைவு:சையத் முஹம்மதலி ஷிஹாப் தங்கல், வரைவு:வக்கம் புருஷோத்தமன். இந்த இரண்டு கட்டுரைகளையும் நான் தானியங்கி மொழிபெயர்ப்பை முடிந்தவரை சரி செய்து விட்டேன். ஆனாலும் ஒரு முறை எவரேனும் சரி பார்த்து. ஏதாவது குறைகள் இருந்தால் மேம்படுத்தி கட்டுரைகளை நகர்த்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏதாவது குறைகள் இருந்தால் தெரிவியுங்கள் மேம்படுத்திக்கொள்ள நான் கடமைப்பட்டுள்ளேன். நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 06:54, 22 செப்டம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]
வணக்கம், தங்கள் கட்டுரை நன்றாக உள்ளது வாழ்த்துகள். கட்டுரையில் உள்ள பெயர்களை சற்று தமிழாக்கினால் நலம் (உதாரணம்:ஷிஹாப்) தகவற்பெட்டியில் உள்ள உறவினர்கள் பற்றிய தகவல்கள் ஆங்கிலத்திலேயே உள்ளது. அதனை மாற்றவும்.நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 07:31, 22 செப்டம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]
@Sridhar G நீங்கள் கூறியதை செய்துவிட்டேன். ஷிஹாப் என்பதை சிஹாப் என்று மாற்றி விட்டேன். தங்களுடைய வாழ்த்துகளுக்கு நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 08:20, 22 செப்டம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]
@Fahimrazick வரைவு:சையத் முஹம்மதலி ஷிஹாப் தங்கல் எனும் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தங்கல் / தங்ஙள் எது சரி?-- நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 08:41, 22 செப்டம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]

சந்தேகம்[தொகு]

ஆங்கில விக்கிப்பீடியாவில் Pond என்பது தமிழ் விக்கிப்பீடியாவில் எக்கட்டுரையுடனும் இணைக்கபடவிள்ளை ஆனால் மலையாள விக்கிப்பீடியாவில் കുളം (குளம்) என்பதுடன் இணைக்கபட்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவில் குளம் என்பது Irrigation tank என்பதுடன் இணைக்கபட்டுள்ளது. Pagers (பேச்சு) 13:49, 15 அக்டோபர் 2023 (UTC)Reply[பதில் அளி]

Pond என்பதை குளம் என்ற கட்டுரையுடன் இணைக்கலாம். Irrigation tank என்பதை 'பண்ணைக் குட்டை' என்ற பெயரில் கட்டுரை எழுதலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 18:36, 15 அக்டோபர் 2023 (UTC)Reply[பதில் அளி]

Presidential Pride of Performance Award தமிழாக்கம் உதவி[தொகு]

https://en.wikipedia.org/wiki/Bushra_Ansari என்னும் இந்த கட்டுரையை நான் மொழிபெயர்க்கத் திட்டமிட்டுயுள்ளேன். "Presidential Pride of Performance Award" என்கின்ற ஒரு விருது வருகிறது அதை எப்படி மொழிபெயர்ப்பது என்று தெரியவில்லை. எவரேனும் உதவுக நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 07:47, 20 அக்டோபர் 2023 (UTC)Reply[பதில் அளி]

""செயல்திறனின் பெருமை" எனலாம். 1989 ஆம் ஆண்டில், கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக இவருக்கு "செயல்திறனின் பெருமை" என்ற விருது பாக்கித்தான் அரசுத்தலைவரால் வழங்கப்பட்டது. செயல்திறனின் பெருமை என்ற ஒரு கட்டுரையையும் தொடங்கலாம்.--Kanags \உரையாடுக 08:48, 20 அக்டோபர் 2023 (UTC)Reply[பதில் அளி]
நன்றி புஷ்ரா அன்சாரி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 10:30, 20 அக்டோபர் 2023 (UTC)Reply[பதில் அளி]

Jaag Broadcasting Systems (Pvt) Limited தமிழாக்க உதவி[தொகு]

https://en.wikipedia.org/wiki/Samaa_TV என்னும் இந்த கட்டுரையை நான் மொழிபெயர்க்கத் திட்டமிட்டுயுள்ளேன். Jaag Broadcasting Systems (Pvt) Limited என்கின்ற ஒரு நிறுவன பெயர் வருகிறது அதை எப்படி மொழிபெயர்ப்பது என்று தெரியவில்லை. முக்கியமாக Broadcasting Systems என்பதை மொழிபெயர்க்கத் தெரியவில்லை. எவரேனும் உதவுக நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 04:56, 23 அக்டோபர் 2023 (UTC)Reply[பதில் அளி]

ஒலிபரப்பு ஒருங்கியம் எனக் குறிப்பிடலாம். (மூலங்கள்: ஒலிபரப்பு, ஒருங்கியம்) - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:08, 23 அக்டோபர் 2023 (UTC)Reply[பதில் அளி]

@Selvasivagurunathan m நன்றி, (Pvt) Limited எப்படி மொழிபெயர்ப்பது என்பது தெரிவித்தார் நன்றாக இருக்கும். ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 05:11, 23 அக்டோபர் 2023 (UTC)Reply[பதில் அளி]
"சாக் புரோட்காசுட்டிங் சிசுடம்சு என்ற தனியார் நிறுவனம்" என்று எழுதலாம்.--Kanags \உரையாடுக 06:24, 23 அக்டோபர் 2023 (UTC)Reply[பதில் அளி]

நாராயணபுரம் மகாதேவர் கோயில் (குஜராத்தி கட்டுரையின் மொழி பெயர்ப்பு)[தொகு]

நாராயண்புர் மஹாதேவ மந்திர் (https://w.wiki/7tC9) என்ற குஜராத்தி மொழி சிறு கட்டுரையை நாராயணபுரம் மகாதேவர் கோயில் என்ற தலைப்பில் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்ய முற்பட்டு கட்டுரையை ஓரளவு முடித்தும் விட்டேன். ஆனால், கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மாநில, மாவட்ட, ஊர் பெயர்களையும் அங்கே ஓடும் மகாநதியை பற்றிய வர்ணனை போன்றவற்றை மீண்டும் உறுதிசெய்ய முயன்ற பொழுது பல முரண்பாடுகளை சந்திக்க நேரிட்டது. தற்பொழுதைய சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்புர் என்ற தனி மாவட்டமே உள்ளது. குஜராத்தி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மகாநதியின் கரையோரம் நாராயணபுரமோ, மகாதேவர் கோயிலோ இருப்பதாக தெரியவில்லை. எனவே, கட்டுரையை முடித்தபின் "கட்டுமானத்தில் உள்ளது" என்ற வார்புருவை பயன்படுத்தி இது இறுதியான பதிப்பல்ல என்று தெரியும்வண்ணம் தமிழ் கட்டுரையை வெளியிட்டுள்ளேன். தகுந்த ஆதாரம் இல்லாமல் எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரையை குஜராத்தி விக்கிபீடியா எவ்வாறு அனுமதித்தது என்று தெரியவில்லை. தமிழ் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கட்டுரையை அழிக்க இயலுமா? எவ்வாறு அதை செய்வது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 10:50, 24 அக்டோபர் 2023 (UTC)Reply[பதில் அளி]

நிர்வாக அணுக்கம் பெற்றவர்கள் அக்கட்டுரையை எளிதில் நீக்க முடியும். நீங்கள் மற்றொரு கட்டுரையை மொழியாக்கம் செய்ய முயலுங்கள். நீங்களாகவே நீக்கல் பரிந்துரையையும் கொடுக்க முடியும். --மகாலிங்கம் இரெத்தினவேலு 11:25, 24 அக்டோபர் 2023 (UTC)Reply[பதில் அளி]

மிக்க நன்றி. ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 11:51, 24 அக்டோபர் 2023 (UTC)Reply[பதில் அளி]

அரபு மொழி-ஆங்கில மொழி-தமிழ் மொழி[தொகு]

அரபு மொழிப் பெயர்களை ஆங்கில மொழியில் எழுதும்போது f எனும் எழுத்து பயன்படுத்தப்படுகிறது. தமிழில் எழுதும்போது, f வரும் இடங்களில் முப்புள்ளியைப் (ஃ) பயன்படுத்தலாமா? அண்மையில் எழுதிய கட்டுரைகளை இவ்விதமாகவே தலைப்பிட்டுள்ளேன்.

  1. ரபா (Rafah)
  2. ரபா எல்லையைக் கடக்கும் பகுதி (Rafah Border Crossing)
  3. அல்-சிபா மருத்துவமனை (Al-Shifa Hospital)

இக்கட்டுரைகளை ரஃபா, ரஃபா எல்லையைக் கடக்கும் பகுதி, அல்-சிஃபா மருத்துவமனை என்பதாக எழுதலாமா? @Kanags:, @செல்வா: உங்களின் உதவியை வேண்டுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:30, 28 அக்டோபர் 2023 (UTC)Reply[பதில் அளி]

@Selvasivagurunathan m: ஃ சொல்லின் தொடக்கத்தில் வரக்கூடாது. இடையில் வரமுடியும். ரஃபா, அல்-சிஃபா என எழுதலாம்.--Kanags \உரையாடுக 07:00, 29 அக்டோபர் 2023 (UTC)Reply[பதில் அளி]

@Kanags: தங்களின் வழிகாட்டலுக்கு நன்றி. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:57, 29 அக்டோபர் 2023 (UTC)Reply[பதில் அளி]

பன்மைச் சொற்களுக்கு தலைப்பு எப்படி வைக்கலாம்?[தொகு]

en:Northern Provinces, en:Cape Provinces என்ற இரு கட்டுரைகள் தமிழில் இல்லை. இவையிரண்டும் மல்லிப் பேரினத்தின், இருவேறு இனங்களுக்கு பிறப்பிடமாக/தாயகமாக உள்ளன. இவை பன்மைச் சொல் என்பதால் தமிழில் எப்படி பெயர் வைக்கலாம்? உங்கள் பரிந்துரையைத் தருக. உழவன் (உரை) 09:50, 17 நவம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]

வட பெருவட்டாரம், முனை பெருவட்டாரம் என வைக்கலாமென்று எண்ணுகிறேன். வட்டம் என்பது குறிப்பிட்ட நிலப்பகுதி. வட்டாரம் என்பது சுற்றியுள்ள நிலப்பகுதி. அதாவது மாறக்கூடிய நிலப்பகுதி எனலாம். உழவன் (உரை) 05:21, 22 நவம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]

பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் Province என்பதை மாகாணம் என்றே மொழிபெயர்த்துள்ளனர். நானும் அவ்வாறே தொடர்கிறேன்.--மகாலிங்கம் இரெத்தினவேலு 01:32, 29 நவம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]

இக் கோயில், இக் கோட்டை[தொகு]

இக் கோயில், இக் கோட்டை என தமிழ் விக்கிப்பீடியாவில் பல இடங்களில் எழுதப்பட்டுள்ளன. இது சரியா அல்லது இக்கோயில், இக்கோட்டை என எழுதவேண்டுமா? (இந்தக் கோயில், இந்தக் கோட்டை என நான் எழுதுகிறேன்) இவ் ஊர் என்றும் சில இடங்களில் எழுதப்பட்டுள்ளன. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:47, 19 நவம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]

இக்கோயில், இக்கோட்டை, இவ்வூர் சரியான பயன்பாடு.--Kanags \உரையாடுக 05:31, 22 நவம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]

உதவியதற்கு நன்றி. பல நேரங்களில்... நாம் பள்ளியில் கற்றது, வாசித்தது, எழுதியது இவற்றின் மீதே ஐயம் ஏற்பட்டு விடுகிறது! ஒரு பக்கம் தொழினுட்பம் வளர்ந்து கொண்டிருக்கையில்... இன்னொருப் பக்கம் மொழி சிதைக்கப்படுவது வருத்தமாக உள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவை தொடர்ந்து செம்மைப்படுத்த வேண்டியது நீண்ட காலத் தேவைகளுள் ஒன்றாகும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:56, 22 நவம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]


வேற்றுமொழி நூல்கள் பற்றிய கட்டுரைகள் மொழியாக்கம் செய்யப்படும் போது நூலின் பெயரை எவ்வாறு எழுதுவது?[தொகு]

Prophet Song என்ற நூலைப் பற்றிய கட்டுரையை மொழிபெயர்க்கத் தொடங்கும் போது “புரோபெட் சாங்” என்றே எழுதுவதா? தீர்க்கதரிசியின் பாடல் என மொழிபெயர்ப்பதா? தலைப்பிடல் மரபில் தமிழ் விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதல் என்ன? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். --மகாலிங்கம் இரெத்தினவேலு 01:30, 29 நவம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]

புரோபெட் சாங், நூல் என எழுதப் பரிந்துரைக்கிறேன். புரோபெட் சாங் (Prophet Song) என நீங்கள் கட்டுரையின் முதல்வரியை அமைப்பீர்கள். அதுவே தேடுபொறிகளுக்கு உதவுமென எண்ணுகிறேன். மேலும், பல நூல்களின் தலைப்பை, சரியாக புரிந்து கொள்ள நூல் என்ற பின்னொட்டு தேவையாகிறது. முன்பு பின்னொட்டினை அடைப்புக் குறிகளுக்குள் எழுதுவர். அடைப்புக்குறி பயன்பாடு நிரலாக்க மேலாண்மையின் போது இடர் வருவதால், எளிமையாக அடைப்புக்குறிகளுக்கு மாற்றாக, காற்புள்ளியை பிற மொழியினர் பயன்படுத்துகின்றனர். இதனால் குறைவான விசைகளையும் பயன்படுத்தலாம். நாமும் பின்பற்ற விரும்புகிறேன். உழவன் (உரை) 02:11, 29 நவம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]
புரோஃபெட் சாங் என்றே தலைப்பிடலாம். (இந்த நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் தமிழ் நூலின் பெயரைக் கொண்டு தலைப்பிடலாம்). நூல் பின்னொட்டு இங்கு தேவைப்படாது. அவ்வாறே தேவைப்பட்டாலும் (நூல்) என அடைப்புகளுள் எழுதுவதே விக்கி நடைமுறை.--Kanags \உரையாடுக 06:24, 29 நவம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]
பதிலளித்த இருவருக்கும் நன்றி.--மகாலிங்கம் இரெத்தினவேலு 17:02, 30 நவம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]

சான்றாதாரங்கள்[தொகு]

சில கட்டுரைகளில் சான்றாதாரங்கள் என எழுதப்பட்டுள்ளது. ஒரே பொருளைத் தரும் இரு சொற்கள் இணைக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். மேற்கோள்கள் அல்லது சான்றுகள் என்பதாக திருத்தம் செய்யலாமா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:50, 30 நவம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]

மேற்கோள்கள் என்பதைப் பயன்படுத்தலாம். சான்றுகள் என்ற சொல் evidence என்பதால் இதைத் தவிர்க்கலாம். ஒரு சில கட்டுரைகளில் மேற்கோள் என்பதற்கு குறிப்புகள் என்றும் எழுதப்பட்டுள்ளது.-- சா. அருணாசலம் (பேச்சு) 17:09, 30 நவம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]

அண்மையில் நான் செய்த மாற்றம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:07, 30 நவம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]

மேற்கோள்கள் என்றே எழுத வேண்டும். அவை கட்டுரையில் உள்ள குறிப்பிட்ட இடங்களுக்குச் சுட்டப்பட வேண்டும். குறிப்புகள் வேறு, மேற்கோள்கள் வேறு. மேலும், மேற்கோள்கள் சுட்டப்படாமல் குறிப்பிடப்படும் சான்றுகளை உசாத்துணை எனக் குறிப்பிடலாம்.--Kanags \உரையாடுக 06:29, 1 திசம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]

@Kanags: விளக்கியமைக்கு நன்றி! மேற்கோள்கள் குறித்தான வழிகாட்டல் பக்கத்தில், இந்த நெறிமுறைகளை இற்றைப்படுத்துகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:45, 1 திசம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]

வழிகாட்டல் பக்கம் மேம்படுத்தப்பட்டது. எடுத்துக்காட்டுகள் சேர்க்கப்பட்டு தொடர்ந்து மேம்படுத்தப்படும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:56, 2 திசம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]

பிற மொழி விக்கித்தொகுப்புகளைத் தொகு-தொடர்பாக[தொகு]

தமிழில் உருவாக்கப்பட்ட ஒரு சில தொகுப்புகள் ஆங்கிலத் தொகுப்புடன் இணைக்காமல் விக்கித்தரவு உருவாக்கத்துடன் உள்ளன. ஆங்கிலத் தொகுப்பிற்கும் தனியாக விக்கித்தரவு உள்ளதால் இத்தொகுப்புகளை ஆங்கில கட்டுரையுடன் இணைப்பதில் (பிற மொழி விக்கித்தொகுப்புகளைத் தொகுத்தல்) சிக்கல் உள்ளது. இதனை எவ்வாறு சரி செய்வது. உ.ம். நாராயணசாமி நாயுடு (தமிழில்), ஆங்கிலத்தில் Narayanaswamy Naidu. நன்றி சத்திரத்தான் (பேச்சு) 00:58, 6 திசம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]

@சத்திரத்தான்: Y ஆயிற்று ஆங்கில (பிறமொழி) விக்கிப்பீடியா கட்டுரைத் தலைப்பை நகலெடுத்து தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையில் உள்ள இணைப்புகளைத் தொகுக்க வேண்டும். இதுவே இலகுவான வழி.-- சா. அருணாசலம் (பேச்சு) 01:19, 6 திசம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]
நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 01:25, 6 திசம்பர் 2023 (UTC)Reply[பதில் அளி]