பாக்கித்தான் என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடாகும். இந்நாடு 24.15 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் உலகின் மிக அதிக மக்கள் தொகையுடைய ஐந்தாவது நாடாகத் திகழ்கிறது. 2023-ஆம் ஆண்டின் கணக்குப்படி, உலகின் இரண்டாவது மிகப் பெரிய முசுலிம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இந்நாட்டின் தலைநகரம் இசுலாமாபாத் ஆகும். அதே வேளை, கராச்சியானது இந்நாட்டின் மிகப் பெரிய நகரமாகவும் நிதி மையமாகவும் திகழ்கிறது. பரப்பளவின் அடிப்படையில் உலகிலேயே 33-ஆவது மிகப் பெரிய நாடு. இந்நாடானது தெற்கே அரபிக்கடல், தென்மேற்கே ஓமான் குடா தென்கிழக்கே சர் கிரிக் நீர் எல்லைக் கோடு ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. கிழக்கே இந்தியா, மேற்கே ஆப்கானித்தான், தென்மேற்கே ஈரான் மற்றும் வடகிழக்கே சீனாவுடன் இது நில எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்நாடானது ஆப்கானித்தானின் குறுகிய வக்கான் தாழ்வாரத்தால் வடமேற்குப் பகுதியில் தஜிகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. மேலும்...
242 பேருடன் சென்ற ஏர் இந்தியா வானூர்தி 171 (படம்) இந்தியா, அகமதாபாதில் தரையில் மோதி வெடித்ததில் 241 பயணிகளும், தரையில் குறைந்தது 28 பேரும் உயிரிழந்தனர்.
துட்டு என்பது தற்போது வழக்கில் இல்லாத குறைந்த மதிப்பு கொண்ட பழைய டச்சு செப்பு நாணயம் ஆகும். இது தமிழில் குறைந்த மதிப்புள்ள பணத்தைக் குறிக்கும் ஒரு பேச்சு வழக்காக உள்ளது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,74,873 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.